9 மாத குழந்தைகளுக்கு, உணவு ஊட்டுவது என்பது உங்களுக்கு முதல் சவாலாக இருக்கும். இந்த காலத்தில் சாப்பிட குழந்தைகளுக்கு போர் அடிக்கும் விளையாட்டில்தான் அதிக ஆர்வம் இருக்கும். இப்போது கொஞ்ச பெரிய குழந்தையாக தெரிவார்கள். பற்களும் நன்றாக வளர்ந்து இருக்கும். என்னென்ன உணவுகள் தரலாம் (Food Chart for 9 months Babies) ?
பற்கள் வளர்ந்து கொண்டிருப்பதால் உங்கள் குழந்தைக்கு, எரிச்சல் உணர்வைத் தர கூடும். சாப்பிடவும் பிடிக்காது. பசி எடுக்கும் உணர்வும் அவ்வளவாக இருக்காது. குழந்தையை சாப்பிட வைக்க அழகாக அலங்கரித்து வைப்பதும், சுவையாக உணவைத் தயாரித்து வைத்திருப்பதும், குழந்தை சாப்பிடும் படி பக்குவமாக சமைத்து வைத்திருப்பதும் முக்கியம்.
உங்கள் குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப உணவைக் கொடுப்பதும் தயார் செய்வதிலும் கவனம் செலுத்துங்கள்.
என்னென்ன உணவுகளை அறிமுகப்படுத்தலாம்?
- தர்பூசணி
- குடமிளகாய்
- டர்னிப்
- பனீர்
- பிரெட் ஸ்டிக்ஸ்
- பராத்தா – சிறிய துண்டுகள்
- வேக வைத்த உருளைக்கிழங்கு
- வேக வைத்த பீட்ரூட்
- நன்கு வேக வைத்த கேரட் துண்டுகள்
இதையும் படிக்க: 6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை
- விதவிதமான உணவுகளைக் கொடுத்து பழகுங்கள்.
- ப்யூரி, கூழ் வகை உணவுகளை நிறுத்திவிடுங்கள்.
- ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தொடங்கி விட்டால் கூழ் உணவுகள் தேவையில்லை.
- தாய்ப்பால் கொடுப்பதைத் தொடருங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கொடுப்பது நல்லது.
- இந்திய மசாலா வகைகளை ஒவ்வொன்றாக சேர்க்கலாம். குறைந்த அளவில் உணவில் சேர்த்துக் கொடுக்கலாம்.
- பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை குழந்தைகளும் சாப்பிட விரும்புவர். அவர்களுக்கு சிறிதளவு கொடுத்துப் பழக்கலாம்.
- ஸ்பூனால், கையால் குழந்தை தானாக சாப்பிட விரும்பினால் அனுமதியுங்கள்.
- தனியாக குழந்தை சாப்பிட விரும்பினால், குழந்தைக்கு உணவு கொடுக்கலாம். ஆனால், குழந்தை சரியாக சாப்பிடுகிறதா புரை ஏறுகிறதா எனக் கவனியுங்கள்.
- கட்டாயப்படுத்தி குழந்தைக்கு ஊட்ட வேண்டாம். பசி வந்ததும் குழந்தைகளே சாப்பிட ஆரம்பிக்கும்.
- உணவு கொடுக்கும்போது கதைகள் சொல்வது, சிறு சிறு விளையாட்டுகளை விளையாடுவது என செய்யலாம்.
- அளவான உணவைக் கொடுத்து பழக்கலாம்.
- அவ்வபோது பசி எடுத்தாலும் இடை இடையே உணவைத் தரலாம்.
- புதிய உணவு கொடுக்கும் போது, 3 நாள் விதியைப் பின்பற்றுங்கள். உடனுக்கு உடன் கொடுக்க வேண்டாம்.
பனீர் பராத்தா
Image Source: iamgujarat
இதையும் படிக்க: 7 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை
தேவையானவை
- ஹோம்மேட் பனீர் – ¼ கப்
- கோதுமை மாவு – 250 கிராம்
- நெய் – தேவையான அளவு
செய்முறை
- கோதுமை மாவை தண்ணீர் விட்டு பிசைந்து, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- சிறிதளவு மாவை எடுத்து பராத்தாவாக திரட்டி அதில் துருவிய பனீரை வைத்து, ரோல் செய்து மீண்டும் திரட்டவும்.
- தவாவில் பராத்தாவை போட்டு நெய் ஊற்றி சுடவும்.
- நன்கு வெந்தவுடன் எடுத்து விட வேண்டும்.
ஆப்பிள் டர்னிப் சாலட்
Image Source: farm fresh to you
தேவையானவை
- மெல்லிதாக அறிந்த ஆப்பிள் – 1
- மெல்லிதாக அறிந்த டர்னிப் – 1
- கொத்தமல்லி நறுக்கியது – சிறிதளவு
- ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- 10 நிமிடங்களுக்கு ஆப்பிள், டர்னிப்பை வேக வைக்க வேண்டும்.
- வெந்ததும் ஆறவிடவும்.
- பெரிய பவுலில் போட்டு ஆலிவ் எண்ணெய் ஊற்றி, சிறிதளவு கொத்தமல்லி தூவி தரவும்.
இதையும் படிக்க: 10-வது மாதத்தில் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
சர்க்கரைவள்ளி கிழங்கு அரிசி கஞ்சி
Image Source: mummumtime
தேவையானவை
- அரிசி – 1 கப்
- சர்க்கரைவள்ளி கிழங்கு – 2
- தண்ணீர் – 3 கப்
- தாய்ப்பால் / ஃபார்முலா மில்க் – 1 கப்
செய்முறை
- பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- அரிசியை அதில் போட்டு வேக வைக்கவும்.
- பாதி வெந்ததும், சர்க்கரைவள்ளி கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக அறிந்து அரிசி பாத்திரத்திலே போடவும்.
- தண்ணீர் தேவைப்பட்டால் கூடுதலாக சேர்க்கவும்.
- மிதமாத தீயிலே அரிசியும் கிழங்கும் வேக வேண்டும்.
- வெந்ததும் ஆற வைத்துவிட்டு அதில் தாய்ப்பால் / ஃபார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
இதையும் படிக்க: 8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை (Food Chart for 8 Month Babies)
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null